Breaking News
17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி போக்சோவில் கைது

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி போக்சோவில் கைது
குளித்தலை அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 நாட்கள் முன்பு சிறுமி மாயமானதையடுத்து சிறுமியின் தாயார் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பாக்கியராஜை பிடித்த குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து இன்று கைது செய்தனர். பிறகு குளித்தலை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை சிறையில் அடைக்கப்படவுள்ளார்.