வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது!

0
193
#image_title
வெடிவிபத்து போல் பரவிய போலி புகைப்படம்! அமெரிக்க சந்தை சரிந்து மீண்டும் உயர்ந்தது!
அமெரிக்க இராணுவ தலைமை இடமான பென்டகன் அருகே வெடி விபத்து ஏற்பட்டது போல் பரவிய புகைப்படத்தால் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்து மீண்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதாவது மே 22ம் தேதி அமெரிக்க இராணுவ தலைமை இடமான பென்டகன் அருகே வெடிவிபத்து எற்பட்டது என்று தகவல்கள் பரவியது. பென்டகன் கட்டிடத்திற்கு அருகில் கரும்புகை இருப்பது போல ஒரு புகைப்படமும் ஒன்று பரவியது.
இதற்கு மத்தியில் இந்த செய்தியும், புகைப்படமும் பரவிய நாளன்று அதாவது மே 22ம் தேதி அமெரிக்க பங்குசந்தைகளில் சில நிமிடங்களுக்கு சரிவு ஏற்பட்டது. 500 பில்லியன் டாலர் இநிதய மதிப்பில் 41 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குச் சந்தைகள் சரிந்தது. இதையடுத்து பரவிய செய்தியும் புகைப்படமும் போலி என்று தெரிந்த பின்னர் அமெரிக்க பங்குச்சந்தை மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீண்டது.
வெடிவிபத்து ஏற்பட்டவாறு இருக்கும் புகைப்படம் டுவிட்டரில் நீலநிற குறியீடு உள்ள கணக்கிலிருந்து பகிரப்பட்டதால் மக்கள் அனைவரும் இந்த செய்தியை உண்மை என்று நம்பி அவர்களது பங்குகளை விற்றனர். இதனால் அமெரிக்க பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட்டது என்று தகவல் வெளியாககயுள்ளது.
பின்னர் அமெரிக்க இராணுவ தலைமையிடமான பென்டகனுக்கு அருகே எந்தவித வெடி விபத்தும் ஏற்படவில்லை. இந்த புகைப்படமும் செய்தியும் போலியானது என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.