முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் செயல்படுவதாக கூறி தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்!! வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு!!

0
154
#image_title

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் செயல்படுவதாக கூறி தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக தேசிய பட்டியலின ஆணையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க., செயலாளர் சீனிவாசன் புகார் அளித்திருந்தார். இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய பட்டியலின ஆணையம், கடந்த 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் ரீதியாக இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் பட்டியலின சமுதாயத்தைச் சாராதவர் அளித்த புகார் குறித்து விசாரிக்க தேசிய பட்டியலின ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவில் பட்டியலின ஆணைய முன்னாள் துணைத் தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை என்றும் வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.

author avatar
Savitha