அடேய் 90ஸ் கிட்ஸ் சாபமெல்லாம் உங்களை சும்மா விடாதுடா! பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

0
64

தற்போது பள்ளி பருவ வயதில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ, பதின் பருவ வயதிலேயே பருவக் கோளாறு பிடித்துவிடுகிறது. இதன் காரணமாக, பலர் காதலபித்துப்பிடித்து சுற்றித்திரிந்து வருகிறார்கள்.

பதின் பருவ வயதை கடப்பதற்கு முன்னரே பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், பள்ளி படிப்பின் மீது கவனமிழந்து காதல் என்ற பெயரில் பெண் பிள்ளைகள் பின்னால் மாணவர்கள் சுற்றி திரிவது வேதனையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

இதற்கு முதலில் உளவியல்ரீதியாக மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி அவர்களுடைய கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.

படிக்க வேண்டிய வயதில் தேவையற்ற விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் சுற்றி திரிவதால் அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் வீணாவதற்கான வாய்ப்பிருக்கிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அதாவது, அந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலியைக்காட்டியிருக்கிறார். இதை கவனித்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் நேராக பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் இதுதொடர்பாக விசாரணை செய்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவரின் பெற்றோரை வரவழைத்து மாணவ, மாணவியரை, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளார்.

அதோடு 9ம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பிக்கயிருப்பதால் மாணவர்கள் மீது இது தொடர்பாக இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அன்பழகன் தலைமையிலான கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதியிலிருக்கின்ற பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற சீர்கேடுகளையும், அவலநிலைகளையும், ஒழுக்கமின்மையையும் அறிந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வேதனையடைந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு பள்ளிகளில் நடைபெறும் சீர்கேடுகளையும், ஒழுக்கமின்மையையும், சரி செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த பள்ளியில் ஒழுக்கமின்மையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.