எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள்

0
98
8 way road salem to chennai-salem news in tamil today news4 tamil
8 way road salem to chennai-salem news in tamil today news4 tamil

எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள்

போக்குவரத்த நெரிசலை காரணமாக கூறி சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 10 ஆயிரம் கோடியை  மத்திய அரசு ஒதுக்கியது. இதனையடுத்து இந்த திட்டத்திற்காக கடந்த ஆட்சியில் சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் கையகப்படுத்தபட்டது.

இந்நிலையில் இதனை எதிர்த்து இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதனையடுத்து போராட்டம் நடத்திய அந்த விவசாயிகள் மீது பல வழக்குகள் பதியப் பட்டது.. இந்நிலையில்  முதல்வராக பதவியேற்றுள்ள  மு.க. ஸ்டாலின் இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்வதாக  அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் பூலாவரி, குப்பனூர், குள்ளம்பட்டி, பாரப்பட்டி மற்றும் ராமலிங்கபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் விவசாயிகள் ஒன்று கூடி வழக்கை ரத்து செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.இந்த நிகழ்வின்போது பட்டாசு வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

அடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ஒன்றுகூடிய விவசாய சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பகிர்ந்தனர் மகிழ்ந்தனர்.