பச்சைத்துண்டை வைத்து மக்களை ஏமாற்றும் முதல்வர் டிடிவி.தினகரன் அதிரடி!

0
53

சென்ற பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் எட்டு வழி சாலை திட்டத்தில் மக்களுடைய மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவோம் என தெரிவித்த முதல்வர் தேர்தல் முடிந்த பின்னர் அவருடைய சுய ரூபத்தை காட்டிவிட்டார் என விமர்சனம் செய்திருக்கின்றார் டிடிவி.தினகரன்.

இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கின்றது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என விடாப்பிடியாக நிற்க்கும் முதல்வருக்கும் சட்டசபையில் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று தெரிவித்த ஸ்டாலினுக்கும் வேண்டுமானால் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கலாம் ஆனால் மக்களின் உணர்வுகளுக்கும் கண்ணீருக்கும் நீதி கிடைக்காமல் போனதுதான் வேதனை அளிக்கின்றது.

இப்போது ஊர் ஊராக சென்று நானும் விவசாயி தான் என்று தெரிவித்து பச்சைத் துண்டு போட்டு போஸ் கொடுக்கும் இதே முதல்வர்தான் அரை ஏக்கர் ஒரு ஏக்கர் வைத்திருக்கும் ஏழை மக்களுடைய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பிடுங்கி இந்த திட்டத்தை எவ்வாறாவது செயல்படுத்த வேண்டும் என்று துடித்தார் இதற்காக சேலம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வாழைத் தோப்புகள் பாக்கு மரங்கள் தென்னை தோப்புகளில் கிணறுகள் குளங்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகள் பள்ளிக்கூடங்கள் கோயில்கள் கால்நடை பண்ணைகள் வனப்பகுதிகளை அழித்து மலைகளை உடைப்பதற்கு திட்டமிட்டார்.

காலம் காலமாக இருக்கின்ற தங்களுடைய வாழ்வாதாரம் பறி போவதை பார்த்து பதறி கண்ணீர்விட்டு போராடிய விவசாயிகள் மற்றும் பெண்கள் இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர் காவல்துறையை வைத்து அவர்களை அடித்து துன்புறுத்தி சிறையில் போட்டார்கள் சென்ற பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் மக்களுடைய மனநிலையை அறிந்து செயல்படுவோம் என்று தெரிவித்த முதல்வர் பழனிசாமி தேர்தல் முடிந்தவுடன் தன்னுடைய சுயரூபத்தை கட்டிவிட்டார் சாலை இல்லாவிட்டால் எப்படி போவது என்று எதிர் கேள்வி கேட்டு எட்டு வழிச்சாலையில் கொண்டு வருவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச்சென்றார்.

இதற்கு முன்னரே இருக்கின்ற சாலைகளை எட்டு வழிகளாக மாற்றினால் அதில் வாகனங்கள் செல்லாதா அதைக்கொண்டு தொழில்வளம் பெருகதா இவ்வளவு பெரிய சீரழிவை நடத்தி புதிய சாலைகள் போட்டால்தான் சென்னையிலிருந்து சேலத்திற்கு விரைவாக செல்ல இயலுமா பசுமையை அழித்து விட்டு பசுமைவழிச் சாலை போடும் திட்டம் எதற்காக யாருக்காக இதுபோன்ற கேள்விகளுக்கு முதல்வரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை ஏன் என்றால் அவருக்கு எப்போதும் மக்களுடைய நலன் மீது அக்கறை இருந்தது கிடையாது சுய லாபம் மட்டுமே ஒரே நோக்கம் அதற்காகத்தான் அந்ததந்த நேரத்தில் மக்களை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் இன்று அவர் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றார்.

இவ்வளவுக்கும் பின்னர் ஒரு துளியாவது மனசாட்சி இருந்தால் எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கையை முன்னெடுக்க கூடாது விவசாயிகளிடமிருந்து அடித்து பிடுங்கப்பட்ட இடங்களையெல்லாம் எந்த ஒரு தாமதமும் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களிடமே உடனடியாக ஒப்படைத்துவிட வேண்டும் அப்படி செய்யாமல் மக்களுடைய உணர்வுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு எட்டு வழி சாலை போடுவதற்கு நினைத்தால் மக்களுடைய மன்றத்தில் அதற்கு ஏற்ற தீர்ப்பு கிடைத்தே தீரும் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கின்றார்.