உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

0
88

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிதுள்ளது.
அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு அதிமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருவோரையும் , ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் காரணத்தினால் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சையத் கான், கே வெங்கடேசன், எல் வெங்கடேசன், பாண்டியன், கஜேந்திரன், டி பாபு, எஸ் பாஸ்கரன், அசோக் குமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களுடன் கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.