மானின் வயிற்றில் இருந்த. 7 கிலோ எடை கொண்ட பொருள்! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

0
74

தாய்லாந்தில் உடல்நலக்குறைவு எதுவுமின்றி 10 வயது மான் உயிரிழந்த பொழுது, சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மானை பரிசோதித்த போது வயிற்றில் 7 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் துணிகள் ஆகியவை இருந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டு வரும் பொழுது அதனை தடுக்க வேண்டும் என்று எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் நம்மைச் சார்ந்த உயிரினங்கள் கடல் அமைப்புகள் என அனைவருக்கும் பிளாஸ்டிக் ஒரு மிகப்பெரிய எமனாகவே இருக்கிறது.

 

விலங்குகள் பறவைகள் மீன்கள் ஆகியவை நாம் என்ன எண்ணுகிறோம் என்றே தெரியாமல் அதை சாப்பிட்டு வயிறு பெருத்து இறந்து விடுகின்றன. அந்த மாதிரியான ஒரு சம்பவம்தான் ஒரு பத்து வயது மானுக்கு ஏற்பட்டுள்ளது.

 

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மாகாணத்தில் குன் தான் என்ற வனவிலங்கு பூங்கா உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த பூங்காவிற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்வார்கள்.

 

இந்நிலையில் அந்த பூங்காவில் இருக்கும் பத்து வயது மான் திடீரென உயிரிழந்த சம்பவம் அங்கு உள்ள வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

மேலும் இருந்து போன மானை கண்ட பொழுது அந்தமானின் உடலில் எந்த ஒரு காயங்களும் இல்லையே எப்படி இது நடந்தது என்று குழப்பம் அடைந்தனர்.

 

மான் இருக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள வன ஆய்வாளர்கள் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மானை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

 

உடற்கூறு செய்யும் பொழுது வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பைகளையும், ப்ளாஸ்டிக் காபி கப், ரப்பர் கையுறை, துண்டுகள் மற்றும் உள்ளாடைகள் என இருந்து கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர். மொத்தம் 7 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் துணிப்பைகள் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது.

 

மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் அதன் வயிற்றிலிருந்து அதுதான் அதனால் செரிமானம் அடையாமல் உயிரிழந்து உள்ளது. ஏற்கனவே இந்த மாதிரியான ஒரு சம்பவம் கடற் பசுவின் குட்டிக்கு ஏற்பட்டு இருந்த நிலை குறிப்பிடத்தக்கது.

 

இதனால் பூங்காவிற்குள் பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் வன ஆய்வாளர்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு தடுத்தனர். இந்த சம்பவம் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.

விலங்குகள் மற்றும் பறவைகள் மற்ற இனங்களால் நமக்கு எந்த கேடும் இல்லை. ஆனால் மனிதர்களால் மற்ற உயிரினங்களுக்கு கேடை தவிர வேறு எதுவும் இல்லை. மனிதகுலம் அழிவிற்கு இதுவே சான்று.

author avatar
Kowsalya