ஒவ்வொரு  24 மணிநேரத்திற்கும்  77 பாலியல் வழக்குகள்! அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்!

0
87
Justice for the dead girl! Judge gives sentence to army officer
Justice for the dead girl! Judge gives sentence to army officer

ஒவ்வொரு  24 மணிநேரத்திற்கும்  77 பாலியல் வழக்குகள்! அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.அந்தவகையில் இரு தினங்களுக்கு முன்பு கூட பெங்களூரில் 6 வயது தக்க சிறுமி தனது உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதனையடுத்து டெல்லியில் மக்கள் பாதுகாப்பு தன்னார்வலராக சபியா என்ற பெண்மணி பணி புரிந்து வந்தார்.இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளித்ததையடுத்து அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போது சபியாவை சடலாமாக ஓர் காட்டினுள் இருந்து போலீசார்  மீட்டனர்.அவரை கற்பழித்து கொலை செய்து காட்டில் வீசி விட்டனர் என்ற சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற எத்தனை வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர் என்ற கணக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விட தற்போது 2020 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது என கூறியுள்ளனர்.அதாவது 2019 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 4,05,236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அதே கடந்த 2020 ஆம் ஆண்டு 3,71,503 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.இவற்றின் கணக்கின்படி பார்த்தல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர்.இதில் மொத்த பாலியல் வழக்குகள் 27,46 என கூறியுள்ளனர்.இதில் பாதிக்கப்பட்ட 25,495 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி 2,655 பேர் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் ராஜஸ்தானில் தான் அதிகளவு கற்பழிப்பு வழக்குகள் பதிவ செய்யப்பட்டுள்ளது.ஓர் ஆண்டிற்கு 5,310 வழக்குகள் பதிவாகியுள்ளது.அதனையடுத்து மத்திய பிரதேசம்,மராட்டியம்,அசாம் போன்றவை உள்ளது.குறிப்பாக வட இந்திய மக்களே அதிகளவு பாதிப்பிற்குள்ளகின்றனர்.