Breaking News

நடைபயிற்சியில் மலர்ந்த காதல்.. 19 வயது பெண்ணை கரம்பிடித்த 70 வயது முதியவர்..!

Published

on

காதலுக்கு கண் இல்லை என்ற சொல்லாடல் நம்மிடையே அதிகம் புழங்குவது உண்டு. அதற்கு காரணம் காதலிக்கும் இருவருக்கும் அவரின் இணையிடம் சிறு குறை கூட தென்படாது. சமூகம் அவர்களுக்கு பல அளவுகோல்கள் வைத்திருந்தாலும் காதலர்கள் தங்கள் வானில் சிறகடித்து பறந்து கொண்டே இருப்பர். அப்படி ஒரு காதல் ஜோடியை பற்றிய தொகுப்பே இது,

சமீபத்தில் பாகிஸ்தானின் பிரபல யூட்யூபர் தனது யூட்யுப் சேனில் ஒரு காதல் ஜோடியை பற்றிய காணொளியை பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோவில் லாகூரை சேர்ந்த 70 வயது முதியவரான லியாகத் அலியும், அவரின் காதல் மனைவியான 19 வயது ஷமீலாவும் தங்களது காதல் கதையை விவரித்திருந்தனர். இதுகுறித்து லியாகத் அலி கூறுகையில், ஷமீலாவை காலையில் நடைபயிற்சி செய்யும் போது முதலில் சந்தித்தேன்.

Advertisement

அப்போது ஒரு பாடலை முனுமுனுத்துக் கொண்டு நடைபயிற்சி செய்தேன் அதன் பின்னே இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம் என தெரிவித்துள்ளார். இருவருக்குள்ளும் வயது வரம்பெல்லாம் தடை இல்லை என கூறிய ஷமைலா அதனை தொடர்ந்து அவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார். அவர்களிடம் எடுத்து கூறியதை அடுத்து, அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்தார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசும் போது மிகப்பெரிய வயது வித்யாசத்தில் திருமணம் செய்து கொள்ளுபவர்களின் முடிவை சமுதாயம் ஏற்று கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தவறான ஒருவரை திருமணம் செய்து கொள்ளுவதற்கு பதிலாக நல்லவரை திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார்.

Advertisement

ரொமன்ஸ்க்கு வயது வரம்பு கிடையாது என கூறும் அலி தன்னுடைய மனைவி சமைக்கு சமையல் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு காதலுக்கு வயது தடை இல்லை எனவும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Trending

Exit mobile version