தாம்பரம் மாநகராட்சியில் இத்தனை பதற்றமான வாக்குச்சாவடிகளா? ஆணையர் பரபரப்பு பேட்டி!

0
66

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நகராட்சியாக இயங்கிவந்த தாம்பரம் மாநகராட்சியாக தரம்வுயர்த்தப்பட்ட சூழ்நிலையில், அங்கே தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய 70 வார்டுகளுக்கு 701 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

தாம்பரம் மாநகராட்சியில் நோய் தொற்று காரணமாக, தேர்தல் பிரச்சார பேரணி பொதுக் கூட்டங்கள் போன்றவை நடத்துவதற்கு தற்சமயம் அனுமதி கிடையாது, உள்ளரங்கு சந்திப்பிற்கு மட்டுமே 100 பேர் வரையில் அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்திருக்கிறார்.

அதோடு பணப் பட்டுவாடாவை தடுக்கும் விதத்தில் 7 பறக்கும்படை அமைக்கப்பட்டிருக்கிறது மாநகராட்சி முழுவதும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார். இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் தாம்பரம் மாநகராட்சியில் 7,76,512 வாக்காளர்கள் வாக்களிக்கயிருக்கிறார்கள்.

வேட்புமனுவை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்ற அட்டவணையின் அடிப்படையில், பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் பெறப்படும் என்று கூறியிருக்கிறார்.

பிப்ரவரி மாதம் 5ம் தேதி வேட்புமனு பரிசீலனை மற்றும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி விண்ணப்பங்கள் திரும்ப பெறப்படும், அதோடு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் தேர்தல் வாக்குப்பதிவு 22 ஆம் தேதி குரோம்பேட்டையில் இருக்கின்ற தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் மாதம் 2ம் தேதி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் மார்ச் மாதம் 4ம் தேதி அன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும்.

மாநகராட்சியில் 75 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும்.

வார்டு எண் 1 முதல் 10 வரையில் அனகாபுத்தூர் அலுவலகத்திலும், 11 முதல் 20 வரையில் பம்மல் அலுவலகத்திலும், 21 முதல் 30 வரையில் பல்லாவரம் அலுவலகத்தில் இருக்கின்ற ஆணையர் அலுவலகத்திலும், வார்டு எண் 31 முதல் 40 வரையில் ஏற்கனவே தாசில்தார் அலுவலகமாக இயங்கி வந்த கூடுதல் கட்டிடத்திலும், 41 முதல் 50 வரையில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்திலும் 51 முதல் 60 வரையில் பெருங்களத்தூர் அலுவலகத்திலும், 61 முதல் 70 வரையில் செம்பாக்கம் அலுவலகம், உள்ளிட்ட 7 பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அவர் கூறியிருக்கின்றார்.