இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு நோய் தொற்று பரவல்!

0
104

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவல் இந்தியாவிற்கு ஊடுருவியது.

அதன் பிறகு இந்த நோய் தொற்று பரவல் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வேகமெடுக்கத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆனாலும் கூட இந்த நோய் தொற்று பரவல் அப்போது இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியது.

இதனையடுத்து இந்த நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியது அதற்கு முன்பாகவே இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த நோய் தொற்றுக்கு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட நோய் தொற்றுக்கு எதிரான ஊரடங்கு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்துதல், போன்ற கடுமையான நடவடிக்கைகளால் நோய் தொற்று பரவல் இந்தியாவில் மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது.

ஆனால் திடீரென்று இந்த நோய் தொற்று பரவலின் 2வது அலை வேகமெடுக்க தொடங்கியது .அதன் பிறகு மீண்டும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய, மாநில, அரசுகள் தீவிர படுத்தினர்.

அதன் பலனாக தற்போது மெல்ல, மெல்ல, இந்த நோய் தொற்று பரவல் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,395 என பதிவாகியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,395 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,44,78,636 என்று அதிகரித்ருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பில் இருந்து 6,614 பேர் குணமடைந்ததால் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,39,00,204 என பதிவாகி உள்ளது.

தற்போது வரையில் 50,342 பேர் சிகிச்சையிலிருக்கிறார்கள். இந்த நோய் தொற்று காரணமாக, 19 பேர் மரணமடைந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,090 என அதிகரித்தது நாட்டில் இதுவரையில் 214.27 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.