60,280 காலாவதி கொரோனா தடுப்பூசிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!

0
96

60,280 காலாவதி கொரோனா தடுப்பூசிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!

தமிழகத்தில் இந்த இரண்டு மாதங்களில் சுமார் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் காலாவதியாக இருப்பதாகவும், இந்த தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 60,280 கோவாக்சின் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன.இந்த காலவதியான தடுப்பூசிகளை சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சுகாதார பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள காலாவதியாகும் தடுப்பூசிகளை திருப்பி அனுப்ப,பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காலாவதியாகும் தடுப்பூசி மருந்துகளை திரும்ப பெற்று,இதற்கு பதிலாக பாரத் பயோடெக் மூலம் நீண்ட ஆயுளுடன் கூடிய தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Pavithra