ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக தவிர்க்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் ?

0
113

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 ஆவது போட்டி ரத்து செய்யப்பட்டதாக புது தகவல்கள் வரதொடங்கியுள்ளன.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவந்தது, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்று இந்திய அணி முன்னிலை வகித்திருந்த நிலையில் 5 ஆவது டெஸ்ட் போட்டி ஒல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது.

இந்த நிலையில் இந்திய அணியில் பயிற்சியாளர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் அணியில் வீரர்கள் அச்சமடைந்து போட்டியில் பங்கேற்க தயங்கிய நிலையில் 5 ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட
நிலையில், அதை தனி ஒரு டெஸ்ட் ஆட்டமாக நடத்தப்படலாம் என இங்கிலாந்து மற்றும்ம் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த டெஸ்ட் போட்டி நடக்காமல் போனதற்கு ஐபிஎல் போட்டியே காரணமாக சொல்லப்படுகிறது.செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல்லின் இரண்டாம் பாதி தொடங்க உள்ள நிலையில் ஒல்ட் ட்ராபோர்டு போட்டி 14 ஆம் தேதிவரை நடைபெற்றிருக்கும்.

அந்த சமயத்தில் வீரர்களுக்கு கொரானா தொற்று ஏற்படும் பட்சத்தில் அது ஐபிஎல் தொடரை பாதிக்கும். முன்னதாகவே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் இம்முறையும் தொடருக்கு எந்த சிக்கலும் வராமல் தடுக்கவே இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது.

ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த சில நாட்களில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடர் முன்னதே அட்டவணை படுத்தப்பட்ட நிலையில் ஐபிஎல் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளின் நெருக்கடியான அட்டவணையே நேற்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளது.

author avatar
Parthipan K