இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்!

0
91
58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police
58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்!

இலங்கை தற்பொழுது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்ட கலவரம் ஆகவே காணப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் தான் காரணம் என்று மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது சகோதரர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் நடுவே அவர்களே ஆதரிப்பவர்களும் உள்ளனர். கடந்த சில தினங்களாக அரசை ஆதரிப்பவர்கள் மற்றும் அரசு இது அவருக்கும் இடையே தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் அரசை எதிர்ப்பவர்கள் பிரதமர் மற்றும் அவரது சகோதரர்கள் வீட்டை தீ வைத்து தாக்கி வருகின்றனர்.

தற்பொழுது முன்னாள் பிரதமர் கடற்படை தளபதி வீட்டில் தஞ்சம் அடைந்து உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. போராட்டக்காரர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். சூழலில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பல இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழகம் வருகின்றனர். அந்த வகையில் தற்போது இலங்கை சிறையிலிருந்த 58 சிறைக் கைதிகள் தப்பி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் கடல் வழியாக தமிழகம் வர உள்ளதாக கூறியுள்ளனர். அதனால் தமிழக கடலோர பகுதிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி விடுதலை புலிகள் சேர்ந்தவர்களும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்குள் புகுந்து கலவரம் ஏற்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மாநில காவல்துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.