55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்!

0
111
55-year-old man married 18-year-old girl for love! Surprise among all!
55-year-old man married 18-year-old girl for love! Surprise among all!

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்!

பாகிஸ்தானை  சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18வயது) பாடல்கள் பாடி  அதனை  இணையத்தில்  வீடியோவாக  வெளியிட்டு   வருகிறார்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர் இவரது வலைதளபக்கத்தை பின்தொடர்ந்துள்ளார். முஸ்கானின் குரல் பரூக்கிற்கு  பிடிக்கவே  அவரிடம்  பேசி வந்துள்ளார்.

மேலும் இருவருக்குள்ளும் பழக்கம்  ஏற்பட்டு  நட்பாக  மாறியது. இவரும்  முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் முஸ்கானை ஊக்குவிக்கவும் செய்துள்ளார்.

இதனால் முஸ்கானுக்கு பாரூக்கை பிடித்துப்போக வயதை பொருட்படுத்தாமல் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். முஸ்கானுக்கு மறுப்பு தெரிவிக்க மனமில்லாத பரூக்கும் அவரது காதலை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து  இவர்கள்  காதல் விவகாரம்  குறித்து  குடும்பத்தாரிடம்  தெரிவிக்க அதிர்ந்து போன அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

ஆனாலும் தனது காதல் மீது நம்பிக்கை கொண்ட அந்த பெண் குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டனர். 55 வயது நபரை 18 வயது  இளம்பெண்  காதலித்து  திருமணம் செய்துகொள்ள ஒரு இசை காரணமாக இருந்தது அனைவர்  மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
CineDesk