மீண்டும் ஊரடங்கு! மீறினால் அபராதம் அதிரடி உத்தரவை பிறப்பித்த மாநில அரசு!

0
119

ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா மொத்தமாக அச்சுறுத்தி வருகின்றது. உலகின் பல நாடுகள் மறுபடியும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்ற சூழலில் ,மகாராஷ்டிரா மாநிலத்தில் வைரஸ் தொற்று சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதுமே மாலை 5 மணி முதல் அடுத்த தினம் காலை 5 மணி வரையில் 12 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது தொடர்பாக அந்த மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே தினத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த மாநில அரசு ஊரடங்கு உத்தரவு தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக சொல்கிறார்கள். இதுதொடர்பாக அந்த மாநில மந்திரி விஜய்வாடேடிவார் தெரிவித்ததாவது ,அமராவதி மற்றும் எவத்மல் போன்ற மாவட்டங்களில், முன்னரே பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வைரஸ் பரவல் தீவிரத்தை கண்காணித்து ஊரடங்கு மற்றும் அது சார்ந்த கட்டுப்பாடுகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்துக் கொள்ள மாநகராட்சி ஆணையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அந்த மாநிலத்தில் அனேக மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கவும் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்த அவர் இதுதொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை செய்து ஒரு வார காலத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.