தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்!

0
61
All you have to do is make a phone call to get the help of the Tamil Nadu government! Edappadiyar is about to start today!
All you have to do is make a phone call to get the help of the Tamil Nadu government! Edappadiyar is about to start today!

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்!

தமிழக அரசின் உதவியை பெற இனி ஒரு போன் செய்தாலே போதும்! இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்க உள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பல புதிய திட்டங்களை எடப்பாடி அரசு அறிவித்து மக்களின் ஓட்டுக்களை கவர திட்டமிட்டு வருகிறது.இதில் குறிப்பாக திமுக அரசு ஆட்சுக்கு வந்த பிறகு செய்யப்போவதாக கூறும் வாக்குறுதிகளை இப்பொழுதே உடனுக்குடன் எடப்பாடி அரசு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திமுக அறிவிக்கும் ஒவ்வொரு வாக்குறுதிகளும் அதிமுக அரசால் திட்டங்களாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்க உள்ளார்.இதன் மூலமாக மக்கள் இனி தனது கோரிக்கைகளைக் கூற கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல தேவை இல்லை.

அரசின் உதவியை பெற 1100 என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நேரடியக போன் செய்து தங்களது கோரிக்கைகளை கூறினால் போதுமானது ஆகும்.மக்கள் கூறும் நடவடிக்கைகளை உடனுக்குடன் கேட்டு அவர்களது பிரச்னைகளைத்  தீர்த்து வைக்க முடியும் என கூறியுள்ளார்.

இன்று இந்த திட்டத்தை தொடங்கயிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி எந்த அதிகாரிகளை நேரில் பார்த்து மனுகொடுக்க தேவை இல்லை என கூறியுள்ளார். இனி போன் செய்தாலே போதும் அந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து தீர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here