ஒரே நாளில் 28 ஆயிரத்தை கடந்த நோய் தொற்று பாதிப்பு!

0
60

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய்த் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,37,250 பேருக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 16,089 ஆண்கள், 12,426 பெண்கள், என்று ஒட்டுமொத்தமாக 28 ,515 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 5 ,591 பேரும், செங்கல்பட்டில் 1 ,696 பேரும் கோயம்புத்தூரில் 3,629 பேரும் ஈரோடு பகுதியில் 1 ,314 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 63 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேருக்கும், 12 வயதிற்குட்பட்ட 984 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 4628 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 32,52,752 பேருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 50, 498 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள், இதில் 4, 444 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட வார்டுகளிலும், 1120 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

சுமார் 196 நாட்களுக்குப் பின்னர் நோய்த்தொற்று உயிரிழப்பு தமிழகத்தில் 50 ஐ தாண்டி இருக்கிறது, அந்த விதத்தில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகள் 31 பெரும் என்று53 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகி இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக சென்னையில் 13 பேரும், கோயமுத்தூரில் 7 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்றும் மதுரையில் 3 பேரும், உட்பட ஒட்டுமொத்தமாக 22 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. 16 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை பலியான 53 பேரில் 52 பேர் இணை நோயாளிகள் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் 37,412 நோய் தொற்றால் பலியாகி இருக்கிறார்கள், இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நேற்றைய தினம் 28 ,620 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள் அதோடு 2 ,13,534 பேர் சிகிச்சையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.