50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்!

0
72
50000 cows slaughtered! Farmers complain to Tamil Nadu government!
50000 cows slaughtered! Farmers complain to Tamil Nadu government!

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்!

இந்த காலக்கட்டத்தில் அனைத்திற்கும் போராட்டம் எழும்பி விடுவது சாதரணமானதாக ஆகிவிட்டது.அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்தையும் அரசாங்கம் அவ்வாறே கருதுகிறது.ஆங்காங்கே விவசாயிகள் தங்களின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் போராடி வருகின்றனர்.அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மாட்டுவண்டி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.அதில் விவசாயிகளின் கோரிக்கையாக கூறியது,நீதுமன்றத்தின் அனுமதியுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரி மீண்டும் திறக்கப்பட வேண்டும்.மணல் குவாரி திறந்தால் மட்டுமே மாட்டு வண்டி மூலம் அதை எடுத்து சென்று கொடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஓர் வருமானம் ஈட்டமுடியும்.

அதனையடுத்து தாளக்குடி மாதவ் பெருமாள் கோவில் மாட்டுவண்டி குவாரியும் திறக்கப்பட வேண்டும் என கூறினார்கள்.அப்பொழுதுதான் அங்குள்ள மாட்டுவண்டி வைத்துள்ள விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும் என கேட்டுக்கொண்டனர்.எங்கள் இன்னல்களை பலமுறை தமிழக அரசுக்கு எடுத்து கூறியுள்ளோம்.ஆனால்,தமிழக அரசோ இதனை சிறிதும் இன்றளவும் கண்டுகொள்ள வில்லை.இதனையே தொழிலாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவரும் வருமானம் இன்றி அன்றாட வாழக்கையை நடத்த பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.அதனால் மணல் குவாரியை திறக்க தமிழக அரசு வழி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு மாறாக எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால் எங்களின் 50000 மாடுகளையும் நாங்கள் நரபலி கொடுப்போம் என்றும் கூறினர்.எங்களது கோரிக்கைகளை பலமுறை நீர்வளத்துறை,கனிமவளத்துறை,முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என பலருக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.இனியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கா விட்டால் நாங்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகுவோம்.அவ்வாறு நடக்காமல் இருக்க தமிழக அரசு எங்கள் மனுவை ஏற்க வேண்டும் என கூறினர்.