ரேஷன் கார்டு இருந்தால் ரூபாய் 50000 பணம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ரூபாய் 50,000 வரை கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொது மக்கள் வாழ்வாதாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகின்றன.

இவ்வாறு ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கபட்டாலும் முற்றிலும் இயல்பு நிலை திரும்பாமல் தமிழகம் பழைய நிலைக்கு செல்வது மிகவும் கடினம் ஆகும். ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் செயல்படாமலே உள்ளன.

இந்நிலையில் பொதுமக்கள் பலர் வேலை இழந்து சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தமிழக மக்களுக்கு கடந்த சில மாதங்களாக ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கிவருகிறது.

மேலும் ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 1000 ருபாய் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொகை குடும்ப செலவுகளை சமாளிக்க போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் பெரும்பாலான மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி குடும்ப அட்டையை காண்பித்து ரூபாய் 50,000 வரை தனிநபர் கடனாக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் வங்கிகளில் கடன் பெறும் முறையை தமிழக முதல்வர் எளிதாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Copy

Comments are closed.

WhatsApp chat