5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

0
64

5 மணிநேர காரசார விவாதம்:! முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸா? இபிஎஸா?

சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக கட்சியில்,முதல் வேட்பாளர் யாரென்றும் கட்சியின் பொதுச்செயலாளர் யாரென்றும் பெரிய குழப்பநிலை நிலவி வருகின்றது.சமீபத்தில்அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சசிகலா விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில்,முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யதனர்.செயற்குழு என்பது பொதுக்குழுவுக்கு முந்திய பெரிய அளவிலான,
கட்சிக்கு உள்ளடக்கிய அமைப்பு என்பதால் இந்த செயற்குழு கூட்டம் மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் திட்டமிட்டபடி இன்று காலை சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில்,
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் கூடியது.

காலை 10 மணிக்கு கூடிய இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் 5மணி நேரம் நடந்த இந்த விவாத கூட்டத்தில்,முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடும் விவாதம் நடந்தது. இருந்தபோதிலும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதிக்கு,முதல் வேட்பாளர் சர்ச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி முதல் வேட்பாளர் குறித்த முடிவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடமே செயற்குழு ஒப்படைத்துள்ளது.

செயற்குழு முடிவு குறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான
கே.பி.முனுசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: இன்று காலை 10 மணி அளவில் செயற்குழு கூட்டம் கூடியது.இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும்,அதிமுக தலைமையில் இயங்கக்கூடிய கூட்டணியின் முதல் வேட்பாளர் குறித்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அன்று அறிவிப்பார்கள் என
கே.பி.முனுசாமி அவர்கள் கூறியுள்ளார்.

இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால் இன்று செயற்குழு கூட்டத்தில் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் முதல்வர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7 ஆம் தேதி ஒத்தி வைத்தது மக்களிடையேயும்,அரசியல் பிரமுகர்கள் இடையும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

author avatar
Pavithra