மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா! 

0
162
#image_title
மோடி மீண்டும் பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்! மீண்டும் மீண்டுமா!
தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பிரதமராக 48 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்தியில் பாஜக கட்சி ஆட்சி புரிய தொடங்கி நேற்றுடன் அதாவது மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக கட்சியினர் நாடு முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் 9 ஆண்டுகள் சாதனையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் 9 ஆண்டுகால சாதனை புத்தகம் ஒன்றை பாஜக கட்சி வெளியிட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி தொடர்ச்சியாக 3வது முறையாக நரேந்திர மோடி அவர்களே பிரதமராக வருவார்” என்று உறுதியாக கூறியிருந்தார்.
இதையடுத்து வரும் 2024ம் ஆண்டு பார்லிமெண்ட் லோக் சபா தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டர்  நிறுவனமும் இணைந்து கருத்துக் கணிப்பு மேற்கொண்டது. அந்த கருத்து கணிப்பில் மீண்டும் பிரதமராக வருவதற்கு நரேந்திர மோடி அவர்களுக்கு 48 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
கருத்து கணிப்பு முடிவு;
* கருத்து கணிப்பில் 48 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
* கருத்து கணிப்பில் 18 சதவீதம் பேர் இராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
* கருத்து கணிப்பில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு 6 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
* கருத்து கணிப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4.96 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
* கருத்து கணிப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
மற்றொரு கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டுகால ஆட்சி திருப்திகரமாக உள்ளதா இல்லையா என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 73.02 சதவீத மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டுகால ஆட்சி திருப்திகரமாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்னர்.