கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு!

0
183
#image_title
கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு.
தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கையை விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் கடந்த வாரம், சிபிஐ அதிகாரிகள் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜக மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே பெரும் பனிப்போரே நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தினை பராமரிக்க 45 கோடி ரூபாய் அரசு பணம் செலவிடப்பட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இந்த பணம் கொரானா தொற்று காலத்தில் செலவிடப்பட்டதாக கூறி பாஜகவினர் இன்று காலை அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் கூறும்போது, கெஜ்ரிவாலுக்கு 1942-ம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒதுக்கப்பட்டது. தற்போது வரை வீட்டின் மேற்பகுதி மூன்றுமுறை இடிந்து விழுந்துள்ளது.
மேலும் அவரது இந்த மாளிகையை நீங்கள் எடுத்து கொண்டு, உங்களது குடிசையை அவருக்கு தாருங்கள் என கிண்டலாக பதிலளித்துள்ளார்.