Connect with us

Breaking News

4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி! பக்தர்கள் இந்த பொருளை எடுத்துச் செல்ல தடை!

Published

on

4-days-chathuragiri-trekking-permit-devotees-are-prohibited-from-carrying-this-item

4 நாட்கள் சதுரகிரி மலையேற அனுமதி! பக்தர்கள் இந்த பொருளை எடுத்துச் செல்ல தடை!

விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அங்கு மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். வருகிற 19ஆம் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் வருகிற 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். பத்து வயதுக்குட்பட்டவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி இல்லை. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் மலையேறும் பொழுது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க தடை, இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி கிடையாது. இது  போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் காணப்பட்டாலும் மலையேற தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement