Breaking News

ஓசி பஸ்ஸில் செல்ல மாட்டேன் என்று சொன்ன மூதாட்டி மீது பாய்ந்த 4 வழக்குகள்!! திமுக எடுத்த ரிவென்ஞ்!!

Published

on

ஓசி பஸ்ஸில் செல்ல மாட்டேன் என்று சொன்ன மூதாட்டி மீது பாய்ந்த 4 வழக்குகள்!! திமுக எடுத்த ரிவென்ஞ்!!

இரு தினங்களுக்கு முன்பு கோவை அரசு பேருந்தில் துளசி அம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் ஏறினார். அவர் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறியதை கேட்டு, நான் ஒன்றும் ஓசி பஸ்ஸில் செல்ல மாட்டேன் இந்தா பயணச்சீட்டுக்கான பணம் என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவ்வாறு அவர் நடத்துனரிடம் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

Advertisement

திமுக செய்தி தொடர் இணைச் செயலாளர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு ,இது முழுக்க முழுக்க நாடகம். திமுகவை கேலி செய்யவும் மக்கள் மத்தியில் அவமதிப்பை ஏற்படுத்தவும் அதிமுகவினர் தான்  இவ்வாறு செய்துள்ளனர் என்று அவர் கூறினார். கோவை அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர் தான் பிரித்விராஜ். இவர் தனது பக்கத்து வீட்டு மூதாட்டி துளசி அம்மாள் என்பவரிடம் இவ்வாறு நீங்கள் பேருந்தில் ஏறியவுடன் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அவர் பேச்சைக் கேட்டு மூதாட்டியும் அதேபோல் நடந்து கொண்டுள்ளார்.இவ்வாறு திமுக வை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்ததாலும், நடத்துனரிடம் மூதாட்டி தகராறு செய்ததாலும் மூதாட்டி உட்பட அதிமுகவை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

மேலும் படிக்க : ஓசி பஸ் விவகாரம்! மூதாட்டி மீது வழக்கு பதியவில்லை – வெறும் வதந்தி என கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி

Advertisement

Trending

Exit mobile version