வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டி! சூரியகுமார் யாதவ் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி!

0
109

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை தன் வசமாக்கியது.

இப்படியான சூழ்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி நேற்று இரவு ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பாக பிராண்டன் கிங் மற்றும் கெயில் மேயர்ஸ் உள்ளிட்டோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

இந்த ஜோடியில் பிரண்டன் கிங் 20ரன் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். அடுத்ததாக கெயில் மேயர்ஸுடன் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணைந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடிய மேயர்ஸ் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியில் நிக்கோலஸ் பூரன் 22 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து கெயில் மேயர்சும் 73 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சிம்ரோன் ஹெட்மயர், 20 ரன்களும், ரோவ்மன் சற்று நேரம் தாக்குப்பிடித்த அவர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தேவான் தாமஸ் ரன் எதுவும் எடுக்காமலும், ஹோல்டர் 1 ரன்னும் எடுத்து கடைசி வரையில் ஆட்டமடக்காமல் களத்தில் இருந்தார்கள்.

கடைசி கேட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சார்பாக அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கட்டுகளையும் ஹர்த்திக் பாண்டியா மற்றும் அர்ஸ்தீப் சிங் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கட்டையும், கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோர் களமிறங்கினர். முதலாவதாக களமிறங்கிய இந்த ஜோடியில் ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக, வெளியேறினார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார், யாதவுடன் இணைந்தார்.

சீரான ஆட்டத்தை வெளிக்காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் 76 ரன்கள் எடுத்திருந்த சூழ்நிலையில், வெளியேறினார். மறுமுனையில் சீரான ரன் குவிப்பில் ஈடுபட்ட ரிஷப் பண்ட் மற்றும் தீபக் ஹூடா உள்ளிட்டோர அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ரிஷப் பண்ட் 33 ரண்களும், தீபக் 10 ரன்களும் எடுத்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இறுதியில் இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கட்டுகளை பறிகொடுத்து 165 ரன்கள் சேர்த்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பாக அதிக வருஷமாக டோமினிக் டீரிக்ஸ், ஜேசன் ஹோல்டர், உசைன், உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது.