மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா!

0
69
vaccination
vaccination

மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒருநாள் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது.

இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு, இரண்டுவது கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. முதற்கட்ட தடுப்பூசி போடும் பணியில், முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இரண்டாம் அலை கொரோனா தொற்று 45 வயதிற்கும் குறைவானவர்களுக்கு அதிகமாக பாதிப்பதாக டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இதனால், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி மே 1ஆம் தேதியில் இருந்து 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடக்கூடாது என்ற கட்டுப்பாடு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதால், அவர்களுக்கு இந்த அறிவப்பு பொறுந்தாது எனத் தெரிகிறது.