தமிழகத்தில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு! நேற்று 32 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி!

0
114

நாள்தோறும் நோய்த்தொற்று பரவல் தொடர்பான விவரங்களை மத்திய மாநில அரசுகள் தனித்தனியே வெளியிட்டு வருகின்றன.இந்த நிலையில், அதனடிப்படையில், மத்திய அரசின் சார்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் நோய்த்தொற்று விகிதம், நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது.

அதேபோல மாநில அரசின் சார்பாக நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம்,சிகிச்சை பெறுபவர்களின் நிலவரம், நோய் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் நிலவரம், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் நிலவரம், உள்ளிட்டவற்றை மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து வருகிறது.

அந்த விதத்தில் தமிழகத்தில் தினசரி நோய்தொற்று நிலவரம் தொடர்பான தகவலை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 27,899 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 16 பெண்கள் உட்பட 32 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 14 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நேற்று ஒருவருக்கு கூட நோய் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை நேற்றைய நிலவரத்தினடிப்படையில் 293 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து 15வது நாளாக நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் கூட பலியாகவில்லை அதோடு 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.