டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்!!

0
194
#image_title
டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்!
இரயிலில் டிக்கெட் எடுக்காமல் 3.6 கோடி பேர் பயணம் செய்தும் இரயில்வே துறைக்கு 2200 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 3.6 கோடி பேரும் செலுத்திய அபராதத்தினால் மட்டுமே இந்த வருமானம் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்திய நாட்டில் பேருந்து, ரயில், விமான சேவை போக்குவரத்துக்கள் இருந்தாலும் நடுத்தர மக்கள் அதிகமாக விரும்புவது இரயில் போக்குவரத்து மட்டும் தான். இந்த இரயில்வே துறையானது பல திட்டங்களை அறிமுகப்படுத்தி  செயல்படுத்தி வருவதால் இரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றது.
இந்த நிலையில் இரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களின் விபரம் வேண்டும் என்று மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் குவார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த சட்டத்தின் மூலம் இரயில்வே துறையில் இருந்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் குவார் அவர்களுக்கு டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களின் விபரம் அளிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே துறை கொடுத்துள்ள அந்த தகவலில் கடந்த 2019 – 20 நிதியாண்டில் 1.10 கோடி பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். 2021 – 22 நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களின் எண்ணிக்கை 2.7 கோடியாகவும், 2022 – 23 நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களின் எண்ணிக்கை 3.6 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் 2020 – 21ம் நிதியாண்டில் கொரோனா பரவல் காரணமாக 32.56 லட்சம் பேர் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர் என்று தகவல் கொடுத்துள்ளது.
இரயில்ல டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்கள் கொடுத்த அபராதத்தினால் இரயில்வே துறைக்கு 2020 – 21 நிதியாண்டில் 152 கோடி ரூபாய் வருமானமும், 2021 – 22 நிதியாண்டில் 1574.73 கோடி ரூபாயாகவும், 2022 – 23ம் நிதியாண்டில் 2260.05 கோடியாகவும் இது அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை பல சிறிய நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும் என்று இரயில்வே துறையானது சமூக ஆர்வலர் சந்திரசேகர் குவாருக்கு தகவல் அளித்துள்ளது.
இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களுக்கு குறைந்த பட்சம் 250 ரூபாயும் அதை கட்ட மறுத்தால் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதையும் கட்டமறுக்கும் நபருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.