மாணவி ஸ்ரீமதி பலவந்தப்படுத்தப்பட்டாரா? 2வது பரிசோதனை அறிக்கையால் உண்டான பரபரப்பு! என்ன செய்யப் போகிறது நீதிமன்றம்?

0
77

சென்ற மாதம் 13ஆம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்தது.

மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி காவல் துறையினருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் மறு பிரேத பரிசோதனை அறிக்கைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என மாணவியின் பெற்றோர் ஆட்சேபம் தெரிவித்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினடிப்படையில் ஜிப்மர் மருத்துவக் குழுவைச் சார்ந்தவர்கள் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்து அது தொடர்பாக தங்களுடைய அறிக்கையை நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

இந்நிலையில், நேற்று காலை மாணவியின் தாயார் செல்வி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி இன்று ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வு அறிக்கையின் நகலை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆய்வறிக்கையின் நகலை பெற செல்வியின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை இரண்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை வழங்குவதற்கு நீதிபதி புஷ்பராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருவதால் அன்றைய தினம் மனு தாக்கல் செய்து பெறப்போவதாக ஸ்ரீமதியின் தாயார், வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் வித்தியாசம் இருப்பதாக ஸ்ரீமதியின் தாயாரின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது பிரதேச பரிசோதனை அறிக்கையில் கூடுதலான காயங்கள் இருப்பதாகவும், மாணவி ஸ்ரீமதிக்கு பலவந்தம் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்துவதை போல இருக்கிறது என்றும், இன்னும் சந்தேகங்கள் வலுவாக உள்ளதாகவும், அறிக்கையில் வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது.

முதல் பிரேத பரிசோதனை முன் அனுபவமில்லாத மருத்துவர்களை வைத்து அவசர அவசரமாக நடத்தப்பட்டது என கூறியுள்ளார்.

அதோடு மாணவியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கூட அவருடைய விலா எலும்பு உடைந்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு என்ன மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் விலா எலும்பு உடைந்திருக்கும்? என்ற சிந்தனை பொதுமக்களிடையேயும் கூட ஏழத் தொடங்கியது.

அப்போதே ஒருவேளை மாணவி பலவந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.