ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

0
87

அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. முதல் நாளில் சமீபத்தில் மறைந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நேற்றைய சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை மீண்டும் கூடியது சட்டப்பேரவையில் சபாநாயகர் உரையை தொடங்கினார்.

உரையை தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர்கள் கடும் காலையில் ஈடுபட்டு வந்தார்கள் இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சபாநாயகர் அமலியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அமலியில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தார்.

ஆனாலும் தொடர்ந்து அதிமுகவினர் அமலியில் ஈடுபட்டதால் அவை காவலர்களைக் கொண்டு அமலில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அவை காவலர்களைக் கொண்டு வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு.

முன்னதாக நேற்றைய தினம் சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் மட்டுமே பங்கேற்ற நிலையில் இன்று இபிஎஸ் அணியும் பங்கேற்றனர் இந்த நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் அருகருகே அமர்ந்திருந்தார்கள் இதனால் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் சபாநாயகர் பலமுறை எச்சரிக்கை செய்தும் அதிமுகவினர் தொடர்ந்து அமலில் ஈடுபட்டதால் அதிமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் வேண்டுமென்றே கலகம் செய்வதற்காக அதிமுகவினர் வந்திருப்பதாகவும் 1989 ஆம் ஆண்டு கலைஞர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது நிதிநிலை புத்தகத்தை கிழித்தது போல இன்று அதிமுகவினர் நடந்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார் இந்தி திணிப்பு தீர்மானத்தை இங்கு இருந்தால் ஆதரிக்க வேண்டுமே என்பதால் அமளி செய்தார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்துள்ளார் சபாநாயகர்.

மேலும் திருமதி ஜானகி அம்மையார் பதவியேற்கும் போது எப்படி கலகம் செய்தீர்களோ அதே போன்று இன்றும் செய்கிறீர்கள் எனவும் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளுக்கு முதலிடம் வழங்கப்படும் என்றும் கூறினார் சபாநாயகர் அப்பாவு