மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% உயர்ந்த சம்பளம்! ஜூலை முதல் அமல்!

0
115

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று தவணைகளாக தரப்படாமல் நிலுவையில் வைத்திருந்த ஓய்வூதிய அகவிலைப்படியில் ஒரு சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் அவர்களில் டி ஏ மற்றும் டி ஆர் ஆகியவற்றை மத்திய அரசு அதிகபடுத்தியுள்ளது. இரண்டு மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இன் காரணமாக விலைவாசி உயர்வை சமாளிக்க பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் பணியாளர்களும் மற்றும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது, என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளதாக தெரிகின்றது.

மத்திய அரசு அகவிலைப்படியை ஏற்கனவே 11% இருந்தது 28 சதவீதமாக இப்பொழுது உயர்த்தியுள்ளது. ஜூலை 2019 முதல் மத்திய அரசு ஊழியர்கள் 11 சதவீத டிஏ பெற்று வந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது உயர்த்தப்பட்ட தொகையானது 2021 ஜூலை முதல் நடைமுறைக்கு வரும். அதனால் மாதத்திற்கு பதினெட்டாயிரம் ஊதியமாகப் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் தனது சம்பளத்தில் 11 சதவீதம் அதிகமாக பெற்று இவரது சம்பளத்தில் ஜூலை முதல் 5040 உயரும்.

அடிப்படை சம்பளத்துடன் இந்த அகவிலைப்படி இணைக்கப் பட்டுள்ளதால் டிஏ உயர்வு மாதாந்திர வருங்கால வைப்பு நிதி அதாவது பிஎஃப் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் கிராவிட்டி தொகையை உயர்த்தும் என்று சொல்லப்படுகிறது. எனவே பிஎஃப் பணம் ஊழியர்களுக்கு அதிகரிக்கும்.

மேலும் மத்திய வங்கிகளின் வாட்ஸ் அப் மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் கணக்குகள் வரவு வைக்கப்பட்டு ஓய்வூதிய சீட்டுகளை அனுப்ப அனுமதி அளித்துள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் சிரமம் குறைக்கப்படும்.

author avatar
Kowsalya