உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை!

0
74

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போரில் இதுவரை 26 லட்சத்தை கடந்த எண்ணிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையே தொடங்கிய போர் இரண்டு வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

ரஷியாவின் இந்த தாக்குதலை எதிர்த்து போரிடும் வகையில் நேடோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு போர்க்கருவிகளை வழங்கி வருகின்றன. இதனிடையே இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும் அதில் சுமூகமான முடிவு ஏற்படாமலேயே இருந்து வருகிறது.

உக்ரைனில் கிழக்கு, தெற்கு, வடக்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த ரஷிய ராணுவம் தற்போது, நேற்று முன்தினம் முதல் மேற்கு நகரங்களையும் குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. அதே சமயம் தலைநகர் கீவ் மற்றும் அதை சுற்றியுள்ள வடக்கு நகரங்களில் உக்ரைன் வீரர்கள் கடுமையாக எதிர்த்து சண்டையிட்டு வருவதால் அங்கு முன்னோக்கி செல்வது ரஷிய படைகளுக்கு சவாலாக இருந்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலால் அச்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K