நாட்டில் 2500 க்கும் மேல் புதிதாக உண்டான நோய்த்தொற்று பரவல்!

0
77

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்போது உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் பல்வேறு நாடுகள் பல விதமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

என்னதான் உலக நாடுகள் இந்த நோய் தொற்று மிக வேகமாகப் பரவுகிறது என்று தெரிவித்து வந்தாலும் கூட ஒரு சில விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த நோய்த்தொற்று பரவலை வைத்து உலகளவில் அரசியல் நடைபெறுகிறது என்று கருதத் தோன்றுகிறது.

அதற்கு உதாரணம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான போர் உலக நாடுகளில் நோய்த்தொற்று பரவல் மிக தீவிரமாக பரவி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், உக்ரைனில் ரஷ்ய அதனுடைய ஆக்ரோஷமான தாக்குதலை தொடுத்து வருகிறது. ஆனால் அங்கு இதுவரையில் ஒருவருக்கு கூட நோய்த்தொற்று பரவல் பரவியதாக செய்திகள் வெளிவந்த தெரியவில்லை.

இந்த செயலே இந்த நோய்த்தொற்று பரவலை வைத்து உலகளவில் அரசியல் நடக்கிறது என்பதற்கு முதல்நிலை ஆதாரமாக திகழ்கிறது.இந்த சூழ்நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2668 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றுமுன்தினம் ஒன்றான பாதிப்பு நிலவரம் 2503 ஆக இருந்த சூழ்நிலையில் நேற்று சற்று இந்த பாதிப்பு அதிகரித்திருக்கிறது நேற்று அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 809 பேர் மிசோரத்தில்494 பேர் உள்ளிட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,29,96,062 என அதிகரித்திருக்கிறது இதை தவிர ஒடிசா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் தலா 4 பேர் உட்பட மேலும் 97 பேர் நோய் தொற்றால் பலியாகி இருக்கிறார்கள். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5,15,974 என்று அதிகரித்திருக்கிறது.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து மேலும் 4,722 பேர் மீண்டு வந்திருக்கிறார்கள் இதனால் குணமடைந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,24,46,171 என்று அதிகரித்திருக்கிறது.

தற்சமயம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 33,917 ஆக சரிவை கண்டிருக்கிறது. இது நேற்று முன்தினத்தை விட 2251 குறைவு என்று சொல்லப்படுகிறது. நாடுமுழுவதும் இதுவரையில் 180.40 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் நேற்று 19, 64, 473 தவனைகள் அடங்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல் அடிப்படையில், இதுவரையில் 77.97 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது இதில் நேற்று 7,01,773 மாதிரிகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது