இந்த நாளை மறக்க முடியுமா? அதிமுகவின் .மாஜி நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த ஒற்றை அறிக்கை!

0
59

நான் கொடுத்த ஒரு அறிக்கை வரும் கரங்களில் என்னுடைய அரசியல் வாழ்க்கை புதிய பாதைக்கு செல்லும் என்று அன்று நான் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கூறியிருக்கிறார்.

தன்னுடைய பழைய நினைவுகளையும், அரசியல் வாழ்க்கையை தொடர்பாகவும் அசைபோடும் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மைத்ரேயனுக்கு தனியிடம் இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக தன்னுடைய நிலையை முகநூல் பக்கத்தில் தெரிவித்து விடுவார், அந்த விதத்தில் கடந்த 1996ஆம் வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி வரும் ஆனால் 1996 ஆம் ஆண்டு அந்த தேதியை என்னால் மறக்க முடியாது 25 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன, கால் நூற்றாண்டு காலம் கடந்து போய்விட்டது. ஆனாலும் அன்றைய நிகழ்வுகள் இன்றும் பசுமையாக என்னுடைய நெஞ்சில் இருக்கின்றன. நான் என்னுடைய நினைவுகளை இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு பின் நோக்கி எடுத்துச் செல்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

கடந்த 1996ஆம் ஆண்டு நான் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்தேன் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி வழக்கம்போல விடிந்தது எல்லோரும் அவரவர் வேலைகளில் தங்களுடைய கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்கள். திடீரென்று தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் வந்தது. அதாவது திமுக அரசின் காவல்துறை அம்மாவை போயஸ் தோட்ட இல்லத்தில் சென்று கைது செய்தது, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் அதனை வரவேற்றார்கள் வைகோ, சுப்பிரமணியர சுவாமி உள்ளிட்டோர் அம்மாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூட அறிக்கை விட்டார்கள், அப்போது அம்மா கைதை கண்டித்து முதல் அறிக்கையை வெளியிட்டது நான்தான். அம்மாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டன அறிக்கை வெளியிட்டேன் என கூறியிருக்கிறார்.இவ்வாறு அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து அதன் மூலமாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்த மைத்ரேயன் அதிமுகவில் இருந்து அந்த கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் மகுடம் சூடிய நிகழ்வும் நடைபெற்றது.