போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர்! ஐ.நா. அமைப்பு தெரிவித்த தகவல்!!

0
61

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர்! ஐ.நா. அமைப்பு தெரிவித்த தகவல்!!

கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இரண்டு வாரங்களை கடந்த பின்னும் போரை நிறுத்தாமல் உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளது. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷிய படைகளை திறம்பட எதிர்கொள்வதற்காக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு போர் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. எனினும் ரஷிய படைகள் பின்வாங்காமல் தொடர்ந்து உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தனது தீவிர தாக்குதலால் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளன ரஷிய படைகள்.

இதற்கிடையில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடுமையாக சண்டையிட்டு வந்தாலும் அவர்களால் தொடர்ந்து முன்னேற முடியாத சூழல் உள்ளது. இதனால் அங்கு தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது ரஷிய ராணுவம்.

இந்த நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த அர்த்தமற்ற போரினால் லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வகையில் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டியுள்ளது. இது தவிர சுமார் இருபது லட்சம் பேர் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K