தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் தமிழக அரசு! மார்தட்டும் மா. சுப்பிரமணியன்!

0
66

தமிழகத்தில் அண்மைக்காலமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் மெகா முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று கொண்டு லட்சக்கணக்கானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு வருகிறார்கள்.

முதன்முதலாக இந்த தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்ட சமயத்தில் தமிழக அரசு சார்பாக தற்சமயம் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை பொறுத்து அடுத்தடுத்த வாரங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் பொது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அடுத்து வாரம் ஒருமுறை தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இதனடிப்படையில், நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு மற்றும் பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்கள். சென்னையில் நடந்த தடுப்பூசி முகாம்களில் சுமார் 4 ,5 பகுதிகளில் முதலமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அதேபோல அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பில் இருக்கின்ற அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

இப்படியான சூழ்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாமில் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பிற்பகல் பகுதியிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டு விட்டது. பிற்பகல் 3 மணி அளவில் 17.7 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடைசியாக நாள் முடிவில் 24 லட்சத்து 85 ஆயிரத்து 814 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது, இதில் முதல் தவணையாக 14 லட்சத்து 90 ஆயிரத்து 814 நபர்களும், இரண்டாவது தவணையாக ஒன்பது லட்சத்து 95 ஆயிரம் நபர்களும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்கள் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கிய விட கூடுதலாக 9 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் இரண்டு லட்சத்து 13 ஆயிரத்து 763 நபர்களுக்கும், கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 590 நபர்களுக்கும், கோயமுத்தூரில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 618 நபர்களுக்கும், திருச்சியில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 156 நபர்களுக்கும், மதுரையில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 18 நபர்களுக்கும், தஞ்சாவூரில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 11 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகின்றது. அரியலூர், கடலூர், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் குடும்ப நிகழ்ச்சிகளில் நோய் பரவல் கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல பொழுதுபோக்கு இடங்களாக இருக்கின்றன. நிலகிரி,தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் விருதுநகர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தொற்று அதிக அளவில் இருக்கிறது. பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது நேற்றைய தினம் நடந்த தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி எடுத்துக்கொண்டார்கள். சிறப்பு முகாம்களில் பணிபுரிந்த சுகாதார பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. இன்றையதினம் யாரும் தடுப்பூசி செலுத்த வரவேண்டாம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஐஸ்மார்ட் வழிகாட்டுதலை பின்பற்றி தான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இதுகுறித்து வந்துகொண்டிருக்கும் தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறியிருக்கிறார்.

தஞ்சாவூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்கிறார்கள். நிர்ணயம் செய்த இலக்கை விட அதிகமாக தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் இதுவரையில் 4.43 கோடி நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் ஐந்து கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறியிருக்கிறார்.

எதிர்வரும் வாரம் மத்திய அரசிடம் இருந்து 50 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றால் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என கூறி கூறியிருக்கின்றார் அமைச்சர். தமிழகத்தில் இதுவரையில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100% நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வில் பங்குபெற்ற 1.10 லட்சம் நபர்களுக்கு மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மூலமாக கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார் அமைச்சர்