நிரவ் மோடியிடமிருந்து 2,300 கிலோ தங்க நகைகளை மீட்ட அமலாக்கத்துறை

0
89

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு, லண்டனுக்கு தப்பி சென்றவர் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி.

இந்திய அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் கடந்த ஆண்டு அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

மேலும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு நிலுவையிலுள்ளது.

மும்பை சிறப்பு நீதிமன்றம் நிரவ் மோடியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்திருந்தது.

இந்தநிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்டே பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடகு வைக்கப்படாத, ஈடாக வைக்கப்படாத நிரவ் மோடிக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார்.

ஒரு மாதத்துக்குள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி சட்டத்தின் கீழ் நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இதனையடுத்து நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியவர்களுக்கு சொந்தமான 2,300 கிலோ கிராம் அளவிற்கு தங்கம் மற்றும் ட்டைத்தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் முத்துக்களை அமலாக்கத்துறை ஹாங்காங்கில் இருந்து மீட்டு கொண்டுவந்தது.

இவற்றின் மதிப்பு சுமார் 1,350 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K