ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

0
85
223.25 lakh fish fry breeding tanks! The Chief Minister started!
223.25 lakh fish fry breeding tanks! The Chief Minister started!
ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2020-21 -ன் கீழ் கட்டி முடிக்கப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தேனி மாவட்டம், வைகை அரசு மீன்பண்ணைக்கு கூடுதல் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள் 142 இலட்சம் மதிப்பீட்டிலும், மஞ்சளார் அரசு மீன்பண்ணையில் கட்டி முடிக்கப்பட்ட தாய் மீன் தொட்டி மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் 81.25 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்காக இன்று
05.08.2022 சென்னை தலைமை செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அதன்படி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர், .கே. எஸ். சரவணக்குமார் அவர்கள் வைகை அரசு மீன் பண்ணையில் புதிய தொட்டிகளில் மீன்குஞ்சு வளர்ப்பு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் .ந.பஞ்சராஜா மற்றும் இதர அரசு அலுவலர்கள் மற்றும் தெற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் .பாஸ்கரன் அய்யர், பெரியகுளம் நகரச்செயலாளர் திரு.முகமது இலியாஸ், ஒன்றிய கவுன்சிலர் திரு.M.செல்வம், வைகை புதூர் நிறுவாகிகள், திரு.C. இராஜோந்திரன், . M. சந்தனக்குமார் ஜெயமங்கலம் . கருப்பையா, த.முருகன் மற்றும் பெரியகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஒருங்கணிப்பாளர் .K.இராஜேஷ்குமார் ஆகியோர்கள்
கலந்துகொண்டனர்.