அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

0
87

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் சுக பிரசவத்தை அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது தெலுங்கானா அரசு சுகப்பிரசவத்தினையும் அரசு மருத்துவமனையில் பிரசவங்களையும் அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓர் இன்ப செய்தியினை வெளியிட்டுள்ளது.

அதாவது அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு அதிகம் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் குழந்தை பெறுபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை தலா 12,000 வரை வழங்கப்படும் என்றும்,பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் கூடுதலாக 10,000 வழங்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

author avatar
Pavithra