22-11-2022-இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
69

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்தது அனேக நகரங்களில் ஒரு லிட்டர் விலை 100 ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டே சென்றது. இந்த சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான கலால் வரி பத்துரூபாயும், குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைந்தது.

சென்னையில் நேற்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 101 ரூபாய் 40 காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில், 19வது  தினமாக இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் அதே விலையிலேயே நீடித்து வருகின்றது.