21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

0
86

21 வயது பட்டதாரி பெண் தலைமையில் அரங்கேறிய கொள்ளை:! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

BE பட்டதாரி பெண் ஒருவர் ஃபேஸ்புக் நண்பர்களுடன் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பூமிகா என்பவர்.இவர் ஒரு BE பட்டதாரி.பூமிகா அவருடைய தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார்.அதே குடியிருப்பை சேர்ந்த பக்கத்து வீட்டுக்கார்ரான பார்த்திபன் ஷர்மிளா தம்பதியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2-ம் தேதியன்று பார்த்திபன் வேலைக்கு சென்றபிறகு,பூமிகா ஷர்மிளா வீட்டிற்கு சென்று சர்மிளாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று 5 பேர் கொண்ட கும்பல் சர்மிளா வீட்டிற்குள் நுழைந்து,ஷர்மிளா மற்றும் பூமிக்கவை தாக்கி,தாலிக்கொடி உள்ளிட்ட 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து,பார்த்திபன் சர்மிளா தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பெயரில் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இதை தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.கொள்ளை நடந்த நாளன்று பூமிகா தெருவில் 5 நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பது அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பூமிகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பூமிகா தலைமையில் தான் இந்த கொள்ளை நடந்துள்ளது என்று தெரியவந்தது.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு நான் தான் காரணம் என்றும்,படித்துவிட்டு வீட்டில் சும்மாக இருந்ததினால் சொகுசாக வாழ ஆசைப்பட்டு ஃபேஸ்புக் நண்பர்களுடன் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.ஷர்மிளாவிடம் இருக்கும் நகைகளை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த பூமிகா,தனது பேஸ்புக் நண்பர்கள் மூலம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற பெங்களூரில் உள்ள தனது ஃபேஸ்புக் நண்பர்களான,பிரசாந்த்,கிரன்,
சஞ்சய்,புட்டராஜு,நாகராஜ்,
ஆகிய ஐந்து நபர்களை பூமிகா பயன்படுத்திக் கொண்டார் என்பதும் தெரியவந்தது.மேலும் பூமிகா உள்ளிட்ட 6 பேரையும்,சிப்காட் போலீசார் கைது செய்துள்ளனர்.

author avatar
Pavithra