வெளிநாட்டில் இந்தியர்களுக்காக கொண்டுவந்த 21 நாள் திட்டம்! அதிரடி உத்தரவு போட்ட சிங்கப்பூர் அரசாங்கம்!

0
101
21 day plan for Indians abroad! Singapore govt orders action
21 day plan for Indians abroad! Singapore govt orders action

வெளிநாட்டில் இந்தியர்களுக்காக கொண்டுவந்த 21 நாள் திட்டம்! அதிரடி உத்தரவு போட்ட சிங்கப்பூர் அரசாங்கம்!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை மக்களை பாதித்து வருகிறது.தற்போது இந்த கொரோனா 2-ம் அலையாக உருமாறி கொத்து கொத்தாக மாக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

அந்தவகையில் பல வெளிநாட்டு அரசாங்கம்,இந்தியர்கள் அவர்கள் நாட்டிற்கு செல்ல தடை விதித்துள்ளது.கொரோனா தொற்று உள்ளவர்கள்  அங்கு சென்றால் அவர்கள் நாட்டுக்கும் அதிக அளவு பரவ ஆரம்பித்து விடும் என்பதற்காக தடை விதித்துள்ளது.நியூசிலாந்து,ஹாங்காங்,இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியர்கள் வருவதை தடை விதித்துள்ளது.

அந்தவகையில் தற்போது சிங்கப்பூரும் பல கட்டுப்பாடுகளை நிறுவியுள்ளது.இந்தியாவிலிருந்து தொழில் சம்மதமாக வரும் நபர்கள் முதலில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்,அதன்பின் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமை கட்டுப்பாட்டு அறைக்குள் தனிமை படுத்தப்படுவர்.அதன்பின் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்,கொரோனா நெகடிவ் வந்த பிறகு அவர்களை அனுப்பி வைப்பர்.

அதனையடுத்து மீண்டும் 7 நாட்களுக்கு அவர்கள் வீட்டிலேயே தனிமை படுத்தப்படுவர்.மீஎண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.அப்போது நகடிவ் வந்தால் மட்டுமே,அவர்களை வெளியே அனுப்பப்டுவர் என கூறியுள்ளனர்.மொத்தமாக இந்தியாவிலிருந்து யார் சிங்கபூருக்கு சென்றாலும் 21 நாட்கள் தனிமை பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.இந்த கட்டுப்பாடுகள் தற்போது சிங்கப்பூரில் தனிமைபடுத்தும் மையங்களில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.