2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்! ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல்

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம், ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் உருவாவதைத் தடுப்பது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது.

ஆனால், அடுத்த சில தினங்களில் புதிதாக ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. மத்திய அரசின் இந்தச் செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். புதிதாக ரூ.2,000 நோட்டுகளை வெளியிடுவது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மத்திய அரசு கூறிய காரணங்களுக்கு முரணாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.

இதனிடையே, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக நிகழாண்டின் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவல்களை மத்திய அரசு மறுத்து விட்டது.
ஆனால், அண்மைக் காலமாக, ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து விட்டதாகவும், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த நோட்டுகள் வருவதில்லை என்று கூறப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கொடுத்த ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

பதில் விவரம் பின்வருமாறு,

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் 354.2991 கோடி எண்ணிக்கையிலான ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2017-18-ஆம் நிதியாண்டில் 11.1507 கோடி நோட்டுகளும், 2018-19-ஆம் நிதியாண்டில் 4.669 கோடி நோட்டுகளும் அச்சிடப்பட்டன. ஆனால், 2019-20-ஆம் நிதியாண்டில் ஒரு நோட்டுகள் கூட அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால்

மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ‌இறங்குமா என்று மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

Copy
WhatsApp chat