இன்று முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
120
#image_title

இன்று முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அறிவித்தது. மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செப்டம்பர் 30ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை எனவும் அதே சமயத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைவாகவே இருக்கும் காரணத்தினாலும் இவை திரும்பப் பெறப்படுகின்றது எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. மக்கள் எந்த ஒரு விண்ணப்பத்தையும் அளிக்க தேவையில்லை என்று தெரிவித்தது.

இதற்கு மத்தியில் இன்று முதல் மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 20000 ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஒரு நாளுக்கு 10 நோட்டுகள் வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.