நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 200 பல்கலைக்கழகங்கள்! க்யூட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே!

0
128
200-universities-enrolling-students-in-the-current-academic-year-based-on-the-score-of-the-cute-test-only
200-universities-enrolling-students-in-the-current-academic-year-based-on-the-score-of-the-cute-test-only

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 200 பல்கலைக்கழகங்கள்! க்யூட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே!

மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளில் சேர்வதற்காக யுஜிசி  க்யூட் நுழைவு தேர்வை கடந்த ஆண்டு  அறிமுகம் செய்தது. இதில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் முதன்முறையாக நடத்தப்பட்டது. மேலும் இந்த க்யூப் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும்  மாநில பல்கலைக்கழகங்களிலும் சேர்க்கை நடத்தலாம் என யூஜிசி கேட்டுக்கொண்டது.

கடந்த ஆண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் 90 பல்கலைக்கழகங்கள் கியூட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தியது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு வரும் மே 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்க இம்மாதம்  முப்பதாம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில்  200க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் சேர்க்கை  நடத்த உள்ளது. இது குறித்து யுஜிசி மூத்த அதிகாரிகள் ஒருவர் நேற்று கூறுகையில். இந்த  தேர்வை பின்பற்றும் பட்டியலில் 33 மாநில பல்கலைக்கழகங்கள் உள்பட 2௦6 பல்கலைக்கழகங்கள் நடப்பு கல்வியாண்டில்  சேர்ந்துள்ளது,

குறிப்பாக போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த டாக்டர் பி ஆர் அம்பேத்கார் பொருளாதாரம் பள்ளி,குவாஹாட்டி பருத்தி பல்கலைக்கழகம், டெல்லி குரு கோவிந்த சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநில பல்கலைக்கழகங்களும் இந்த நடைமுறையை பின்பற்ற உள்ளனர் என கூறியுள்ளார்.

author avatar
Parthipan K