நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு 

0
122

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு

இந்தியாவில் இந்த ஆண்டு நெல் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ள நிலையில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் அரிசியின் விலை சர்வதேச அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரிசி தட்டுப்பாடு:

உலக அளவில் நெல் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து 150 உலக நாடுகளுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்தியாவில் நெல் சாகுபடியின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.

நெல் சாகுபடியின் அளவு குறைந்துள்ளதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்தியாவில் அரிசி சாகுபடி குறைந்ததன் காரணமாக உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் உள்நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டினால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் குருணை அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளவைகளுக்கு மட்டும் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரைக்கும் நெல் ஏற்றுமதி அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டில் நிலவி வரும் அரசி தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளிப்பதற்காக பாசுமதி அரிசியை தவிர மற்ற அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வரியை 20% ஆக உயர்த்தி உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அரிசி ஏற்றுமதிக்கான வரிவிதிப்பு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ள நிலையில் சர்வதேச அளவில் அரிசியின் விலை உயரும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் நெல் சாகுபடி குறைந்து விட்டதால் தற்போது இந்தியா ஏற்றுமதி வரி சதவீதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகள் வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.