கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

0
95
2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!
2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும்.

மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு சான்றிதழ்களும் இந்த வலைத்தளம் மூலமாக பெறப்படும். தற்போது இந்த இணையதள தகவல்கள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்து வருவதாக தகவல் கிடைத்தது.

இதுத்தொடர்பாக நோடல் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி மதிப்பாய்வு செய்யவதற்கு அனுப்பப்பட்டது. இந்த தகவல்கள் கசிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கூறி மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டது.

ஆனால் மத்திய சுகாதாரத்துறை, கோவின் வலைத்தளம் மிகவும் பாதுகாப்பானது. இந்த தகவல் ஒரு பொய்யான தகவல் என்று கூறி மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது பீகாரைச் சேர்ந்த இருவரை இது தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர் இதற்காக டெலிகிராம் செயலியை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சிறுவன் ஆவார். இது சம்மந்தமாக மேலும் விசாரணை நடத்திய தில்லி சிறப்புப் படை காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்து வருகின்றனர்.

author avatar
CineDesk