நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்!

0
81
2 more officers arrested for removing underwear and checking the students who came to write the NEET exam! People's struggle!
2 more officers arrested for removing underwear and checking the students who came to write the NEET exam! People's struggle!

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயுர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது இந்நிலையில் தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியில் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்ததாக மாணவரின் பெற்றோர் போலீசாரில் புகார் அளித்தனர். அவ்வாறு மாணவியின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்தல் மூலம் மாணவிகள் மன உளைச்சலில் உள்ளார்கள் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதனையடுத்து ஆயுர் நீட் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமினில் வெளிய வராத அளவில்  பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று மேலும் இரண்டு அதிகாரங்களை கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் நீட் தேர்வு மையப் பார்வையாளராகவும் இன்னொருவர் தேர்வு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியவர்கள் எனவும் தெரிய வருகிறது.

மேலும் கைது செய்த இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையே கேரளாவில் பிரச்சனையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி கேரளா அரசு மத்திய மந்திரிக்கும் தேசிய திறனறி தேர்வு மையத்திற்கும் புகார் மனுவை அனுப்பியுள்ளது. மேலும் ஆயுர் நீட் தேர்வு மையத்தில் நடந்தது என்ன என்பதை பற்றி விசாரிக்க உண்மை கண்டறியும் குழுவை நீட் தேர்வு திறனறி மையம் அனுப்பியுள்ளது.

மேலும்  அவர்கள் கேரளாவில் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த தினங்களில் ஐந்து பேர் கைதான நிலையில் தற்போது  இரண்டு பேர்கள் கைதாகிவுள்ளனர் இதனை அடுத்து இன்னும் எத்தனை அதிகாரிகள் கைது செய்ய உள்ளனர் எனவும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author avatar
Parthipan K